வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

போலி உமருக்கு ................?

இனி, நாம் isa koran என்ற கிறித்துவ குழப்பவாதியின் பதிவுகளை காண்போம். இவருக்கு ஒரே குறை முஸ்லீம்களின் பதிவுகளில் இவரின் தொடுப்புக்களை தருவதில்லை என்று. அது மட்டுமல்ல, இவரை கண்டு இஸ்லாத்திற்க்கும், இஸ்லாமியர்களுக்கும் பயமாம், அதனால்தான் தொடுப்புக்களை தறுவதில்லையாம்? என்ற புலம்பல் வேறு.
நாம் மீண்டும், மீண்டும் கேட்கிறோம், கிறித்துவர்கள் ஏன் இஸ்லாமிய பெயரில் வலைப்பதிவுகளை நடத்துகிறீர்கள்? isa koran என்பதை, போப் பைபிள் என்று வைக்கலாமே? ( கிறி்த்துவர்களுக்கு பிறர் கலாசாரத்தை பேணாதே என்று சொல்லிகொடுக்க தூதுவர்கள் இல்லை. அல்லது, வந்தவர்களை கடவுளக்கிவிட்டார்கள் என்ற இஸ்லாமிய கோட்பாடு சரிதானோ?)
இஸ்லாம் சம்பூர்ணமாக்கப்பட்ட மார்க்கம், அது யாரையும் கண்டும் அஞ்சியதுமில்லை, அஞ்சபோவதுமில்லை. இஸ்லாமியர்கள் அஞ்சுவதாக இருந்தால் நேரடி விவாதத்திற்கு அழைக்கமாட்டார்களே? அப்போது தலைதெறிக்க ஓடியது ஏனோ?
இப்போது ஒரு கேள்வி எழுகிறது ஏன் முஸ்லீம்கள் தொடுப்புக்களை தருவதில்லை? சிறு விளக்கம்: குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேச தலைவர்களை பற்றி சொல்லி கொடுக்கும் நாம் போக்கிரிகளை பற்றி சொல்லி கொடுப்பதில்லை, நல்ல உணவுகளை வாங்கி கொடுக்கும் நாம், கெடுதல் தரும் உணவுகளை வாங்கி கொடுப்பதில்லை. காரணம் கெட்ட உணவையும், போக்கிரிகளையும் கண்டு அஞ்சி அல்ல. குடும்பத்திற்க்கு நல்லதல்ல என்பதற்க்காகவே. இப்போது புரிகிறதா போலி உமரே?ஆகையால், நேர்மையான விமர்சனங்களையே எதிபார்க்கிறோம். அல்லது எதை விதைக்கிறீர்களோ அதைத்தான் அறுவடை செய்வீர்கள் என்று கூறிக்கொள்கிறோம். மேலும்,

அபு நூற தளத்தில் இவரை மனோவியதிக்கு அடிமையகிவிட்டவர் என்றும் அயோகியத்தனம் என்றும் எழுதி விட்டார்கள். காரணம்,
“ வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா? “ என்ற பதிவில் கிறித்துவரின் பதில்.
இஸ்லாம், மெக்டொனால்ஸ், ம‌ற்றும் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளி நோய், இவைக‌ள் அனைத்தும் வேக‌மாக‌ வ‌ள‌ருகிற‌து என்ப‌தால், ம‌ற்ற‌வைக‌ளை விடை இவைக‌ள் சிற‌ந்த‌து என்றுச் சொல்ல‌முடியுமா?
இப்பிரச்சனைக்கு மூல காரணமே இவரின் இந்த பதில்தான். இந்த பதிலுக்குத்தான் அபுநூரா அவர்கள் மேற்படி விமர்சித்திருந்தார்கள் ஆகையால் தரமான விமர்சனங்களை தாருங்கள் அதிபுத்திசாலித்தனம் வேண்டாம். (இவரின் பதில் எப்படி உள்ளது என்றால், உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்டவர்களாக கிருத்துவர்கள் இருக்கிறார்கள் ஏன் தெரியுமா? கிருத்துவர்கள் பன்றியை அதிகமாக உண்கிறார்கள் என்ற காரணமாக இருக்கலாம்? என்று சொல்வதை போல் உள்ளது. ஏற்றுகொள்கிறீர்களா போலி உமரே? விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறீர்.)
உடனே, இவர் அபுமூரா தளத்திற்கு கீழ்கண்டவாறு பதில் இடுகிறார்.

அதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் "அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, "உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், "கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.

இதோடு நின்றிருந்தால் நாமும் பாராட்டிஇருப்போம், ஆனால் இவரோ அபுநூரவின் கூற்றை உண்மைபடுத்தியே எழுதிஉள்ளார்.

இந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.

எதோ அதிபுத்திசாலியை போல் எழுதிஉள்ளார். இவரின் கூற்றுபடி இஸ்லாமிய நபி என்றால் கிறித்துவரின் கூற்றை எப்படி ஏற்பார்? ஆகையால், போலி உமரே எளிய வழியை சொல்லட்டுமா? ஆவி எழுப்புதல் கூட்டங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக நடைபெறுகிறதே, அங்கு சென்று ஆவியானவர் வரும்போது, ஆவியானவரே, நான் முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும், தவறாக விமர்சித்துவிட்டேன், ஆதலால் அவர்கள் என்னை திட்டுகிறார்கள். என்னால் வைத்துக்கொள்ள முடியவில்லை, ஆகையால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடலாமே. (ஆவியானவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறதல்லவா?).

இறுதியாக, நேர்மையாக விமர்சனம் செய்யுங்கள் நல்ல பதில் கிடைக்கும், அல்லது விதைத்ததை தான் அறுவடை செய்வீர்கள் என்று மீண்டும், மீண்டும், கூறிக்கொள்கிறோம்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

வலைபதிவுகளும், விமர்சனங்களும் – பகுதி - 2

முதலில், நாம் ஒரு முஸ்லீம் புனைப்பெயர் கொண்ட கிறித்துவரின் வலைத்தளத்தைப் பற்றி பார்ப்போம். இவரின் பதிவுகள் அனைத்தும் கதைகள, கற்பனைகள், பொய்கள், மற்றும் புரட்டுகள் மட்டுமே. மேலும், இவரின் விவாத தன்மை நம்ம ஊர் தெருக்களில் நடக்கும் பெண்களின் தண்ணீர் குழாய் சண்டையை போலவே மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இவரின் விவாத தன்மை அப்படி ஒரு தோற்றததையே தருகிறது என்பது மட்டும் உண்மை. ஆகையால் நேர்மையான, தரமான விமர்சனாங்களையே எதிர்பார்கிறோம். மேலும், இவர் மட்டுமல்ல,பல கிறித்துவ தளங்கள் இஸ்லாமிய பெயரிலேயே தளங்களை நடத்துவதன் நோக்கம் என்னவோ? ஈசா - குரான், உமர் என்பதை மாற்றி பைபிள், போப், என பெயர் வைத்தால் என்ன? அந்த பெயர்கள் பிடிக்கவில்லையா? அல்லது தரமான பெயர்களாக இல்லையா? அல்லது அந்த பெயர் வைத்தால் யாரும் படிக்கமாட்டார்கள் என்ற எண்ணம்மா?


இனி, இவருடைய பதிவுகளை ஆறாய்வோமே. முதலில் நாம் எடுத்துக்கொள்வது திரித்துவமும் நீங்களும் என்ற பதிவை.
திரித்துவமும் நீங்களும் The Trinity and Youஆசிரியர்: சாம் ஸ்க்ளார்ப் (By Sam Schlorff)

இதில் முஸ்லீம் ஒருவர் கேள்வி கேட்பதை போலவும் இவர் பதில் கூறுவதை போலவும் இந்த பதிவு உள்ளது.
கேள்வி : நான் ஒரு முஸ்லிம். கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். திரித்துவக் கொள்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால், அதை என்னால் சரிவர விளங்கிக் கொள்ள முடியவில்லை, விளக்குங்களேன். நன்றி.

கிறித்துவரின் பதில்: கிறிஸ்துவ நம்பிக்கை மற்றும் வாழ்வு பற்றிய சுருக்கமான ஒரு மேலோட்டத்துடன் ஆரம்பித்து அதன் அடிப்படையில் திரித்துவக் கொள்கையினை விளக்குகிறேன். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்; வெளியரங்கமாக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒரே மாதிரியாக இருந்து, நம்பிக்கை மற்றும் அதனைக் கடைப்பிடித்தலில் ஒற்றுமை இருப்பது போலக் காணப்பட்டாலும், உண்மையில் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களே

நமது விளக்கம்: முஸ்லிம்களை பொறுத்தவறையில் ஓர் இறைக்கொள்கையில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளனர். ஆனால திரித்துவ கொள்கையில் குழப்பம் இருப்பதால் தான் கேள்வியே எழுகின்றது. ஆகையால், முஸ்லிம்களின் ஓர் இறைக்கொள்கையும திரித்துவ கொள்கையும் ஒன்றாகவே தெரியாது. ஓர் இறைக்கொள்கை என்பது உண்மை. ஆகையால், திரித்துவ கொள்கையை பற்றி விளக்குங்கள்.

கிறித்துவரின் பதில்: பைபிளில் தேவன் தம்மை மூவொரு தேவனாக வெளிப்படுத்துகிறார் - அதாவது பிதா, குமாரன் (இயேசு‍ al-Masih), மற்றும் பரிசுத்த ஆவியாக வெளிப்படுத்துகிறார். பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவியும் அடிப்படையிலும், நோக்கத்திலும் மனித குலத்திற்கான தேவ திட்டத்தின்படியும் ஒன்றானவர்களே(Father, Son and Holy Spirit are one in essence, in will, and in their plan for mankind.) இது தான் நீங்கள் கேட்ட திரித்துவம் என்கின்ற கிறிஸ்தவக்கொள்கையாகும்.

நமது விளக்கம் : அய்யா, திரித்துவத்துவம் என்றால் என்ன? திரித்துவத்தின் படி ஒரு கடவுளா அல்லது மூன்று கடவுளா என்பதுதான் கேள்வி? தெளிவான பதில் தராமல் குழப்பாதீர். ஒன்று, இரண்டு, மூன்று தெரியும் அதென்ன மூவொரு தேவன். விளக்குவீரா? (பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவியும் அடிப்படையிலும், நோக்கத்திலும் மனித குலத்திற்கான தேவ திட்டத்தின்படியும் ஒன்றானவர்களே) அதாவது அடிப்படை,நோக்கம், மனிதகுலத்திககான தேவ திட்டத்திறக்காக ஒன்றானவர்கள், அப்படி என்றால் மூன்று கடவுள் என்று தானே அர்த்தம்.

கிறித்துவரின் பதில் : துரதிஷ்டவசமாக, பலர் இக்கொள்கையினைப் பற்றி அனேகம் தவ‌றான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவைகளை நாம் ஆராய முயல்வோம். உதாரணமாக, நாம் என்ன தான் எடுத்துக் கூறினாலும் திரித்துவம் என்பதற்குப் பலர் என்ன பொருள் கொள்கிறார்கள் என்றால் “கிறிஸ்தவர்கள் உண்மையாகவே மூன்று கடவுள்களை நம்புகிறார்கள் என்பதே”.

நமது விளக்கம் : இவர் தான் கூறினார் சில அடிப்படை, நோக்கம், தெய்வதிட்டததிற்க்காக ஒன்றானவர்கள் என்று, இப்போது கூறுகிறார் மற்றவர்கள் தவறாக பொருள் கொள்கிறார்கள் என்று. சரியான கருத்தை தான் கூறுமே? யார்தான் கடவுள். பிதாவா, குமாரனா, இல்லை பரிசுத்த ஆவியா? முன்பு, மூவொரு தேவன் என்கிறார், இப்போது ஒரு கடவுள் என்கிறார். ஒரே குழப்பம்.

கிறித்துவரின் பதில்: அப்படியானால் "திரித்துவம்" என்பதன் விளக்கம் என்ன‌? இங்கு பிரச்சனை இக்கொள்கையில் இல்லை, ஆனால், மனித மனங்களின் எல்லையில் உள்ளது. கடவுளின இயல்புகள் மனித மனங்க‌ளின் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட து . பைபிள் இவ்வாறாக அறிவிக்க‌வில்லையா? “தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. (யோபு 11:7-9).”

நமது விளக்கம் : கேட்க்கப்பட்ட கேள்வி, கடவுளின் ஞானத்தையும், வல்லமையையும் பற்றி அல்ல.
திரித்துவத்துவம் என்றால் என்ன? அதாவது திரித்துவத்தில் எத்தனை கடவுள் என்பதே. அதற்க்கு பதில் தராமல் கடவுளின் ஞானத்தையும், வல்லமையையும் பற்றி கூறுகிறீர். கடவுளின் ஞானத்தை பற்றி கேட்க்கும் போது இதை கூறலாமே.

கிறித்துவரின் பதில் : சுருங்கக் கூறின் மெய்யாகவே, தேவன் திரித்துவத்தைப் பற்றிய எல்லா விவரங்களை நமது அறிவுபூர்வமான ஆவலை பூர்த்தி செய்யும் பொருட்டு வெளிப்படுத்த வில்லை அல்லது அவரது தன்மையினை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளும்படியாக வெளிப்படுத்த வில்லை.

நமது விளக்கம் : அப்படியானால் திரித்துவத்தில் குறை உள்ளதாக ஏற்றுகொள்கிறீர்களா?

கிறித்துவரின் பதில் : பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய ஒவ்வொருவரும் நம் இரட்சிப்பிற்காகச் செய்தது என்ன? மற்றும் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ளும் அவசியத்திற்காகவே அவர் இவ்வாறு செய்தார்.

நமது விளக்கம் : அய்யா, கேள்வி திரித்துவத்தில் எத்தனை கடவுள் என்பதே . கதாபாத்திரஙகள் என்ன செய்தன அல்லது என்ன செய்யப் போகின்றன என்று அல்ல. கேட்ட கேள்விக்கு பதில் தாருமே! பத்து பாத்திரத்தில் நடித்தாலும் தசாவதாரத்தின் கதாநாயகன் கமலே. திரித்துவத்தின் கதாநாயகன் (கடவுள்) யார் என்பதை கூறுவீரா?

கிறித்துவரின் பதில் : திரித்துவத்தின் ஒவ்வொருவரும் நமக்காகச் செய்த, செய்து கொண்டிருக்கும் மற்றும் செய்யப்போகும் காரியங்கள் இதோ:

நமது விளக்கம் : திரித்துவத்தின் ஒவ்வொருவரும் என்று சொன்னாலே, ஒன்றிற்கு மேல் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். பின் எப்படி ஒரு கடவுள் என்கிறீர். அடுத்து, கேள்விக்கு பதில் தராமல் ஒவ்வொருவரின் பங்கு என்று திசை திருப்புகிறார். அதையும் தான் பார்ப்போமே.

கிறித்துவரின் பதில் : இயேசுவின் பங்கு. இயேசு தம்மைப் பற்றி, "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" (யோவான் 6:38) எனச் சொல்கிறார்.

நமது விளக்கம் : இயேசுவே, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" என்று சொன்னால் அவரை கட்டுப்படுத்துபவர் ஒருவர் இருக்கிறார். அதாவது இவருக்கு மேல், இவரையே கட்டுபடுத்தும் ஒரு கடவுள் இருக்கிறார் என்று தானே அர்த்தம். அப்படி என்றால் இயேசு கடவுள் இல்லை என்றல்லவா பொருள். அல்லது (இயேசு மற்றும் அவரின் பிதா) ஆகிய இரு கடவுள் என்று தானே அர்த்தம். பின் எப்படி ஒரு கடவுள் என்கிறீர். இதில் மற்றவர்கள் தப்பாக புரிந்து கொள்கிறார்கள் என்று புலம்பல் வேறு.

கிறித்துவரின் பதில் : பிதாவின் பங்கு : உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு நமக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து தேவனிடத்தில் இரட்சிப்பை வேண்டிக் கொள்ளும்போது தேற்றரவாளன் எனப்படும் தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம்முள் இறங்கி வாசம் செய்யவும் தேவனுக்காய் நாம் வாழவும் உதவி செய்வார்.

நமது விளக்கம் : இயேசுவே, மரணத்தை விரும்பி ஏற்க்கவில்லை ஏலி ஏலி லாமா சபக்தனி அட கடவுளே அட கடவுளே என்னை ஏன் கைவிட்டாய் (மத்தேயு 27:46) என்று புலம்புகிறார். அப்படி இருக்கையில் நாம் எப்படி நமக்காக மரித்தார் என்று விசுவாசிக்க முடியும். மேலும், தனக்கு மேல் ஒரு கடவுள் இருப்பதாக அல்லவா கூறுகிறார். இரக்கம் உள்ள இயேசுவையே கைவிட்ட பிதாவை நாம் எப்படி ஐயா நம்புவது. இயேசுவை கைவிட்டதால், ஒரு கொலையை தடுக்கவும் தவறிவிட்டவராக அல்லவா ஆகிறார் பிதா.

கிறித்துவரின் பதில்: நான் எழுதியவைகளைச் சிந்தித்து அதனைப் புரிந்துகொள்ள தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். நீங்களும் தேவனின் பிள்ளைகளாகலாம்.

நமது விளக்கம் : வேண்டாம் அய்யா சிலுவை சுமக்க நாம் தயாராயில்லை. மேலும், கேட்க்கப்பட்ட கேள்வியோ திரித்துவத்தைப்பற்றி, இறுதிவரை கேள்விக்கு பதில் அளிக்காமல் நன்றாக குழப்பிவிட்டு, இறுதியில், "நான் எழுதியவைகளைச் சிந்தித்து அதனைப் புரிந்துகொள்ள தேவனை வேண்டிக் கொள்ளுங்கள்." என்கிறார். இவருக்கே தெரியும், தான் எழுதியது யாருக்கும் புரியாது என்று. அதனால் தான் தேவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறாரோ என்னவோ.

(மீண்டும் ---------------)

Reference:
http://www.unmaiadiyann.blogspot.com/

செவ்வாய், 27 ஜனவரி, 2009

வலைபதிவுகளும், விமர்சனங்களும் – பகுதி - 1

நம் இணையத்தில் ஏராளமான தமிழ் வலைப்பதிவாளர்கள் உள்ளனர். ஒவொருவரும் தனக்கென தனி கருத்து உடையவர்களாகவும், தனி தன்மை உடையவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் ஒரு கடவுள் என்கின்றனர், சிலர் மூன்று கடவுள் என்கின்றனர், சிலர் பல கடவுள்கள் என்கின்றனர், ஆனால், சிலரோ கடவுளே இல்லை என்கின்றனர், சிலர் கம்யூனிசம் என்கின்றனர், சிலர் புரட்சிகர கம்யூனிசம் என்கின்றனர். இதை படிக்கும் வாசகருக்கு சற்று குழப்பமே ஏற்பட்டுவிடும், எந்த கருத்து சரி என்று புரியாமல். வலைப்பதிவாளர்களில்,
பலதரப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். மாற்று கருத்துக்கள் எழும்போது தன் கருத்தை சரி என்று நிரூபிக்கும் உரிமையும், கடமையும் ஒவ்வொரு வலைபதிவாளர்களுக்கும் உண்டு. அல்லது இது என் தனிப்பட்ட கருத்து என்று கூறலாம். ஆனால் சில வலைபதிவாளர்களோ, தன் கருத்தை சரி என்று நிரூபிக்கிறார்களோ இல்லையோ அடுத்தவர்களை தூற்றுவதற்காகவே வலைப்பதிவுகளை நடத்துகிறார்கள் போலும். அந்த அளவிற்கு தரம் இல்லாமல் எழுதுகிறார்கள்.
ஆகையால், "எந்த ஒரு கருத்தையும் ஆத்திரத்தோடு பார்க்காதீர்கள் அதில் உள்ள நிறைவுகள் உங்களுக்கு தெரியாது, அனுதாபத்தோடும் பார்க்காதீர்கள் அதில் உள்ள குறைகள் உங்களுக்கு தெரியாது, நாடுநிலையோடு பாருங்கள்" என்கின்ற கருத்தை மனதில் நிறுத்தி இனி வரும் நாட்களில் ஆராய்வோம்.


எண்ணங்கள்: எவ்வளவு சொல்லியும் என் மனது ஞாபகப்ப்டுத்திக் கொண்டே இருக்கிறது, "சனியனை தூக்கி பனியனாக போடுகிறாய்" என்று.