செவ்வாய், 27 ஜனவரி, 2009

வலைபதிவுகளும், விமர்சனங்களும் – பகுதி - 1

நம் இணையத்தில் ஏராளமான தமிழ் வலைப்பதிவாளர்கள் உள்ளனர். ஒவொருவரும் தனக்கென தனி கருத்து உடையவர்களாகவும், தனி தன்மை உடையவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் ஒரு கடவுள் என்கின்றனர், சிலர் மூன்று கடவுள் என்கின்றனர், சிலர் பல கடவுள்கள் என்கின்றனர், ஆனால், சிலரோ கடவுளே இல்லை என்கின்றனர், சிலர் கம்யூனிசம் என்கின்றனர், சிலர் புரட்சிகர கம்யூனிசம் என்கின்றனர். இதை படிக்கும் வாசகருக்கு சற்று குழப்பமே ஏற்பட்டுவிடும், எந்த கருத்து சரி என்று புரியாமல். வலைப்பதிவாளர்களில்,
பலதரப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். மாற்று கருத்துக்கள் எழும்போது தன் கருத்தை சரி என்று நிரூபிக்கும் உரிமையும், கடமையும் ஒவ்வொரு வலைபதிவாளர்களுக்கும் உண்டு. அல்லது இது என் தனிப்பட்ட கருத்து என்று கூறலாம். ஆனால் சில வலைபதிவாளர்களோ, தன் கருத்தை சரி என்று நிரூபிக்கிறார்களோ இல்லையோ அடுத்தவர்களை தூற்றுவதற்காகவே வலைப்பதிவுகளை நடத்துகிறார்கள் போலும். அந்த அளவிற்கு தரம் இல்லாமல் எழுதுகிறார்கள்.
ஆகையால், "எந்த ஒரு கருத்தையும் ஆத்திரத்தோடு பார்க்காதீர்கள் அதில் உள்ள நிறைவுகள் உங்களுக்கு தெரியாது, அனுதாபத்தோடும் பார்க்காதீர்கள் அதில் உள்ள குறைகள் உங்களுக்கு தெரியாது, நாடுநிலையோடு பாருங்கள்" என்கின்ற கருத்தை மனதில் நிறுத்தி இனி வரும் நாட்களில் ஆராய்வோம்.


எண்ணங்கள்: எவ்வளவு சொல்லியும் என் மனது ஞாபகப்ப்டுத்திக் கொண்டே இருக்கிறது, "சனியனை தூக்கி பனியனாக போடுகிறாய்" என்று.