முதலில், நாம் ஒரு முஸ்லீம் புனைப்பெயர் கொண்ட கிறித்துவரின் வலைத்தளத்தைப் பற்றி பார்ப்போம். இவரின் பதிவுகள் அனைத்தும் கதைகள, கற்பனைகள், பொய்கள், மற்றும் புரட்டுகள் மட்டுமே. மேலும், இவரின் விவாத தன்மை நம்ம ஊர் தெருக்களில் நடக்கும் பெண்களின் தண்ணீர் குழாய் சண்டையை போலவே மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இவரின் விவாத தன்மை அப்படி ஒரு தோற்றததையே தருகிறது என்பது மட்டும் உண்மை. ஆகையால் நேர்மையான, தரமான விமர்சனாங்களையே எதிர்பார்கிறோம். மேலும், இவர் மட்டுமல்ல,பல கிறித்துவ தளங்கள் இஸ்லாமிய பெயரிலேயே தளங்களை நடத்துவதன் நோக்கம் என்னவோ? ஈசா - குரான், உமர் என்பதை மாற்றி பைபிள், போப், என பெயர் வைத்தால் என்ன? அந்த பெயர்கள் பிடிக்கவில்லையா? அல்லது தரமான பெயர்களாக இல்லையா? அல்லது அந்த பெயர் வைத்தால் யாரும் படிக்கமாட்டார்கள் என்ற எண்ணம்மா?
இனி, இவருடைய பதிவுகளை ஆறாய்வோமே. முதலில் நாம் எடுத்துக்கொள்வது திரித்துவமும் நீங்களும் என்ற பதிவை.
திரித்துவமும் நீங்களும் The Trinity and Youஆசிரியர்: சாம் ஸ்க்ளார்ப் (By Sam Schlorff)
இதில் முஸ்லீம் ஒருவர் கேள்வி கேட்பதை போலவும் இவர் பதில் கூறுவதை போலவும் இந்த பதிவு உள்ளது.
கேள்வி : நான் ஒரு முஸ்லிம். கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். திரித்துவக் கொள்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால், அதை என்னால் சரிவர விளங்கிக் கொள்ள முடியவில்லை, விளக்குங்களேன். நன்றி.
கிறித்துவரின் பதில்: கிறிஸ்துவ நம்பிக்கை மற்றும் வாழ்வு பற்றிய சுருக்கமான ஒரு மேலோட்டத்துடன் ஆரம்பித்து அதன் அடிப்படையில் திரித்துவக் கொள்கையினை விளக்குகிறேன். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்; வெளியரங்கமாக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒரே மாதிரியாக இருந்து, நம்பிக்கை மற்றும் அதனைக் கடைப்பிடித்தலில் ஒற்றுமை இருப்பது போலக் காணப்பட்டாலும், உண்மையில் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களே
நமது விளக்கம்: முஸ்லிம்களை பொறுத்தவறையில் ஓர் இறைக்கொள்கையில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளனர். ஆனால திரித்துவ கொள்கையில் குழப்பம் இருப்பதால் தான் கேள்வியே எழுகின்றது. ஆகையால், முஸ்லிம்களின் ஓர் இறைக்கொள்கையும திரித்துவ கொள்கையும் ஒன்றாகவே தெரியாது. ஓர் இறைக்கொள்கை என்பது உண்மை. ஆகையால், திரித்துவ கொள்கையை பற்றி விளக்குங்கள்.
கிறித்துவரின் பதில்: பைபிளில் தேவன் தம்மை மூவொரு தேவனாக வெளிப்படுத்துகிறார் - அதாவது பிதா, குமாரன் (இயேசு al-Masih), மற்றும் பரிசுத்த ஆவியாக வெளிப்படுத்துகிறார். பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவியும் அடிப்படையிலும், நோக்கத்திலும் மனித குலத்திற்கான தேவ திட்டத்தின்படியும் ஒன்றானவர்களே(Father, Son and Holy Spirit are one in essence, in will, and in their plan for mankind.) இது தான் நீங்கள் கேட்ட திரித்துவம் என்கின்ற கிறிஸ்தவக்கொள்கையாகும்.
நமது விளக்கம் : அய்யா, திரித்துவத்துவம் என்றால் என்ன? திரித்துவத்தின் படி ஒரு கடவுளா அல்லது மூன்று கடவுளா என்பதுதான் கேள்வி? தெளிவான பதில் தராமல் குழப்பாதீர். ஒன்று, இரண்டு, மூன்று தெரியும் அதென்ன மூவொரு தேவன். விளக்குவீரா? (பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவியும் அடிப்படையிலும், நோக்கத்திலும் மனித குலத்திற்கான தேவ திட்டத்தின்படியும் ஒன்றானவர்களே) அதாவது அடிப்படை,நோக்கம், மனிதகுலத்திககான தேவ திட்டத்திறக்காக ஒன்றானவர்கள், அப்படி என்றால் மூன்று கடவுள் என்று தானே அர்த்தம்.
கிறித்துவரின் பதில் : துரதிஷ்டவசமாக, பலர் இக்கொள்கையினைப் பற்றி அனேகம் தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவைகளை நாம் ஆராய முயல்வோம். உதாரணமாக, நாம் என்ன தான் எடுத்துக் கூறினாலும் திரித்துவம் என்பதற்குப் பலர் என்ன பொருள் கொள்கிறார்கள் என்றால் “கிறிஸ்தவர்கள் உண்மையாகவே மூன்று கடவுள்களை நம்புகிறார்கள் என்பதே”.
நமது விளக்கம் : இவர் தான் கூறினார் சில அடிப்படை, நோக்கம், தெய்வதிட்டததிற்க்காக ஒன்றானவர்கள் என்று, இப்போது கூறுகிறார் மற்றவர்கள் தவறாக பொருள் கொள்கிறார்கள் என்று. சரியான கருத்தை தான் கூறுமே? யார்தான் கடவுள். பிதாவா, குமாரனா, இல்லை பரிசுத்த ஆவியா? முன்பு, மூவொரு தேவன் என்கிறார், இப்போது ஒரு கடவுள் என்கிறார். ஒரே குழப்பம்.
கிறித்துவரின் பதில்: அப்படியானால் "திரித்துவம்" என்பதன் விளக்கம் என்ன? இங்கு பிரச்சனை இக்கொள்கையில் இல்லை, ஆனால், மனித மனங்களின் எல்லையில் உள்ளது. கடவுளின இயல்புகள் மனித மனங்களின் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட து . பைபிள் இவ்வாறாக அறிவிக்கவில்லையா? “தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. (யோபு 11:7-9).”
நமது விளக்கம் : கேட்க்கப்பட்ட கேள்வி, கடவுளின் ஞானத்தையும், வல்லமையையும் பற்றி அல்ல.
திரித்துவத்துவம் என்றால் என்ன? அதாவது திரித்துவத்தில் எத்தனை கடவுள் என்பதே. அதற்க்கு பதில் தராமல் கடவுளின் ஞானத்தையும், வல்லமையையும் பற்றி கூறுகிறீர். கடவுளின் ஞானத்தை பற்றி கேட்க்கும் போது இதை கூறலாமே.
கிறித்துவரின் பதில் : சுருங்கக் கூறின் மெய்யாகவே, தேவன் திரித்துவத்தைப் பற்றிய எல்லா விவரங்களை நமது அறிவுபூர்வமான ஆவலை பூர்த்தி செய்யும் பொருட்டு வெளிப்படுத்த வில்லை அல்லது அவரது தன்மையினை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளும்படியாக வெளிப்படுத்த வில்லை.
நமது விளக்கம் : அப்படியானால் திரித்துவத்தில் குறை உள்ளதாக ஏற்றுகொள்கிறீர்களா?
கிறித்துவரின் பதில் : பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய ஒவ்வொருவரும் நம் இரட்சிப்பிற்காகச் செய்தது என்ன? மற்றும் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ளும் அவசியத்திற்காகவே அவர் இவ்வாறு செய்தார்.
நமது விளக்கம் : அய்யா, கேள்வி திரித்துவத்தில் எத்தனை கடவுள் என்பதே . கதாபாத்திரஙகள் என்ன செய்தன அல்லது என்ன செய்யப் போகின்றன என்று அல்ல. கேட்ட கேள்விக்கு பதில் தாருமே! பத்து பாத்திரத்தில் நடித்தாலும் தசாவதாரத்தின் கதாநாயகன் கமலே. திரித்துவத்தின் கதாநாயகன் (கடவுள்) யார் என்பதை கூறுவீரா?
கிறித்துவரின் பதில் : திரித்துவத்தின் ஒவ்வொருவரும் நமக்காகச் செய்த, செய்து கொண்டிருக்கும் மற்றும் செய்யப்போகும் காரியங்கள் இதோ:
நமது விளக்கம் : திரித்துவத்தின் ஒவ்வொருவரும் என்று சொன்னாலே, ஒன்றிற்கு மேல் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். பின் எப்படி ஒரு கடவுள் என்கிறீர். அடுத்து, கேள்விக்கு பதில் தராமல் ஒவ்வொருவரின் பங்கு என்று திசை திருப்புகிறார். அதையும் தான் பார்ப்போமே.
கிறித்துவரின் பதில் : இயேசுவின் பங்கு. இயேசு தம்மைப் பற்றி, "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" (யோவான் 6:38) எனச் சொல்கிறார்.
நமது விளக்கம் : இயேசுவே, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" என்று சொன்னால் அவரை கட்டுப்படுத்துபவர் ஒருவர் இருக்கிறார். அதாவது இவருக்கு மேல், இவரையே கட்டுபடுத்தும் ஒரு கடவுள் இருக்கிறார் என்று தானே அர்த்தம். அப்படி என்றால் இயேசு கடவுள் இல்லை என்றல்லவா பொருள். அல்லது (இயேசு மற்றும் அவரின் பிதா) ஆகிய இரு கடவுள் என்று தானே அர்த்தம். பின் எப்படி ஒரு கடவுள் என்கிறீர். இதில் மற்றவர்கள் தப்பாக புரிந்து கொள்கிறார்கள் என்று புலம்பல் வேறு.
கிறித்துவரின் பதில் : பிதாவின் பங்கு : உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு நமக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து தேவனிடத்தில் இரட்சிப்பை வேண்டிக் கொள்ளும்போது தேற்றரவாளன் எனப்படும் தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம்முள் இறங்கி வாசம் செய்யவும் தேவனுக்காய் நாம் வாழவும் உதவி செய்வார்.
நமது விளக்கம் : இயேசுவே, மரணத்தை விரும்பி ஏற்க்கவில்லை ஏலி ஏலி லாமா சபக்தனி அட கடவுளே அட கடவுளே என்னை ஏன் கைவிட்டாய் (மத்தேயு 27:46) என்று புலம்புகிறார். அப்படி இருக்கையில் நாம் எப்படி நமக்காக மரித்தார் என்று விசுவாசிக்க முடியும். மேலும், தனக்கு மேல் ஒரு கடவுள் இருப்பதாக அல்லவா கூறுகிறார். இரக்கம் உள்ள இயேசுவையே கைவிட்ட பிதாவை நாம் எப்படி ஐயா நம்புவது. இயேசுவை கைவிட்டதால், ஒரு கொலையை தடுக்கவும் தவறிவிட்டவராக அல்லவா ஆகிறார் பிதா.
கிறித்துவரின் பதில்: நான் எழுதியவைகளைச் சிந்தித்து அதனைப் புரிந்துகொள்ள தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். நீங்களும் தேவனின் பிள்ளைகளாகலாம்.
நமது விளக்கம் : வேண்டாம் அய்யா சிலுவை சுமக்க நாம் தயாராயில்லை. மேலும், கேட்க்கப்பட்ட கேள்வியோ திரித்துவத்தைப்பற்றி, இறுதிவரை கேள்விக்கு பதில் அளிக்காமல் நன்றாக குழப்பிவிட்டு, இறுதியில், "நான் எழுதியவைகளைச் சிந்தித்து அதனைப் புரிந்துகொள்ள தேவனை வேண்டிக் கொள்ளுங்கள்." என்கிறார். இவருக்கே தெரியும், தான் எழுதியது யாருக்கும் புரியாது என்று. அதனால் தான் தேவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறாரோ என்னவோ.
(மீண்டும் ---------------)
Reference:
http://www.unmaiadiyann.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக